நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

நெல்லையில் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
Published on

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம், வண்ணார்பேட்டையில் உள்ள ஓட்டலில் நேற்று நடைபெற்றது. அவைத்தலைவர் வி.கே.முருகன் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.

நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், தீர்மானக்குழு உறுப்பினர் சுப.சீதாராமன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், மாலைராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 1 கோடி உறுப்பினர்களை கட்சியில் புதிதாக சேர்க்க உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி முதல் ஜூன் மாதம் 3-ந் தேதி வரை அதிகமாக புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் தலைமை சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் கோபி நமச்சிவாயம், தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர் பவுல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com