தமிழகத்தை சேர்ந்த 5 போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது

சிறந்த புலனாய்வு பணிக்காக தமிழக போலீசில் 5 பேருக்கு மத்திய அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 5 போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது
Published on

சென்னை,

2022-ம் ஆண்டில், காவல்துறையில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டதற்காக நாடு முழுவதும் இருந்து 151 போலீசார், மத்திய உள்துறை மந்திரியின் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சி.பி.ஐ.யில் இருந்து 15 பேரும், மராட்டியத்தில் இருந்து 11 பேரும், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து 10 பேரும், கேரளா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்களத்தில் இருந்து தலா 8 பேரும், தமிழகத்தில் இருந்து 5 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் குஜராத், கர்நாடகா, டெல்லி மற்றும் இதர மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 28 பேர் பெண்கள் ஆவார்கள்.

அதன்படி, தமிழகத்தை சேர்ந்த கூடுதல் எஸ்.பி. கனகேஸ்வரி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜனுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு விருது கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குற்றவியல் விசாரணையின் உயர் தொழில்முறை தரங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், விசாரணை அதிகாரிகளின் புலனாய்வு சிறப்பை அங்கீகரிக்கும் நோக்கத்துடனும் இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com