மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பட்டப்படிப்பு தகுதியிலான ‘கிரேடு-1’ தேர்வு 4-ந்தேதி தொடங்குகிறது

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தகுதியிலான ‘கிரேடு-1’ தேர்வு கணினி வாயிலாக நடத்தப்பட இருக்கிறது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பட்டப்படிப்பு தகுதியிலான ‘கிரேடு-1’ தேர்வு 4-ந்தேதி தொடங்குகிறது
Published on

சென்னை,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சென்னை மண்டல இயக்குனர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வருகிற 4-ந் தேதி இந்த தேர்வு தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 6, 7, 10, 11 மற்றும் 12-ந் தேதிகளிலும் தேர்வு நடைபெற இருக்கிறது. காலை 10 மணி முதல் 11 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை என 3 ஷிப்டுகள் வீதம் தேர்வு நடக்கிறது.

தென் பிராந்தியத்தில் இருந்து 2 லட்சத்து 84 ஆயிரத்து 104 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கடலூர் மற்றும் புதுச்சேரி உள்பட 16 நகரங்களில் 37 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கைக்கெடிகாரங்கள், புத்தகங்கள், காகித துணுக்குகள், மின்னணு சாதனங்கள், பத்திரிகைகள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 044-28251139, 94442 34705 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com