மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன் – வைகோ குற்றச்சாட்டு

காவிரி நீர் உரிமையை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் தொடர்ந்து எதிர்ப்போம் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ
Published on

சென்னை,

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார், மத்திய நீர்வளத்துறை மந்திரி நேரில் சந்தித்து, மேகதாதுவில் புதிய அணையை கட்ட அனுமதி கோரி மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்:-

மத்திய அரசே வில்லன்

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசே வில்லனாக செயல்படுகிறது. கர்நாடகாவுக்கு மத்திய அரசு தொடர்ந்து மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. வெளியில் அனுமதி வழங்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு, உள்நோக்கத்துடன் பணிகளை தொடங்குங்கள் என கர்நாடகாவை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து எதிர்ப்போம்

மேலும், “மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி ஒருபோதும் இல்லை. காவிரி நீர் உரிமையை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் தொடர்ந்து எதிர்ப்போம்” என்றும் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com