ஆளுநர்களை வைத்து மாநிலங்களை ஆட்சி செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது -அ.தி.மு.க எம்பி குற்றசாட்டு

ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது என அ.தி.மு.க எம்பி அன்வர்ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.
ஆளுநர்களை வைத்து மாநிலங்களை ஆட்சி செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது -அ.தி.மு.க எம்பி குற்றசாட்டு
Published on

சென்னை

கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை சென்றார். பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிறகு கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 3 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் கோவை மாவட்டத்தில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், ஆளுநர் ஆய்வு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் இன்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்ற ஆளுநர், அங்கு தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மேலும், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மை பணியிலும் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியின் போது உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் உடன் கலந்து கொண்டார்.

பின்னர், காந்திபுரத்தில் நடந்த தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் களத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும் என்றார்.

இது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியது கோவை மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்தான். இதில் எந்த தவறு இல்லை. என கூறினார்

ஆனால் கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு அ.தி.மு.,க. எம்பி. அன்வர்ராஜா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஆளுநரின் செயல்பாடு, மாநில சுயாட்சிக்கு எதிரானது. ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com