தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 519 டன்னாக உயர்த்திய மத்திய அரசு; தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அறிக்கை

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 519 டன்னாக உயர்த்திய மத்திய அரசு; தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அறிக்கை
Published on

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் விவரத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அதன்படி, மே 18 வரை மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை : 86,55,010. மே 15-ந் தேதியன்று, தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்தது. அதன்படி, 7,68,530 கோவிஷீல்ட் மற்றும் 2,66,530 கோவாக்சின் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு ஒதுக்கியது மத்திய அரசு. தமிழகத்திற்கு அளித்து வந்த ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை மே 17 அன்று மத்திய அரசு அதிகரித்தது. இதன் காரணமாக தற்போது கிடைக்கும் 7 ஆயிரம் டோஸ்களுக்கு பதிலாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டோஸ்களை தமிழகம் பெறும். ஏப்ரல் 21 முதல் மே 23 வரை தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட ரெம்டெசிவிர் குப்பிகளின் எண்ணிக்கை 35 லட்சம். இந்திய ரெயில்வே உதவியுடன் டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மே 22 வரை தமிழகத்திற்கு 649.4 எம்.டி. மருத்துவ ஆக்சிஜனை கொண்டு வந்துள்ளது. அதுபோக, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை மத்திய அரசு 519 டன்னாக உயர்த்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் எப்போதும் செய்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com