விவசாயிகளுக்கு மத்திய அரசின் மண்வள அட்டை

மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் விவசாயிகளுக்கு மத்திய அரசின் மண்வள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு மத்திய அரசின் மண்வள அட்டை
Published on

மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் விவசாயிகளுக்கு மத்திய அரசின் மண்வள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மண்வள அட்டை

சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் மண்ணை பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப உரங்களை பயன்படுத்த வேண்டும். இதற்காக சிவகங்கை-தொண்டி ரோட்டில் வேளாண்மை துறையின் மூலம் மண் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள் தங்கள் நிலங்களின் மண் மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகளை கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

மண் ஆய்வு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகினால் அங்கு பணிபுரியும் களப்பணியாளர்கள் மூலம் மண் மாதிரி மற்றும் நீர் மாதிரி சேகரிப்பு செய்து அதனை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்வதற்கும், அதன் முடிவுகளை விவசாயிகளுக்கு வழங்கிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மண்ணின் தன்மை

விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண்ணின் தன்மை, உப்பின் நிலை, காலர் அமில நிலை, அங்குக கருமம், சுண்ணாம்பு தன்மையை போன்ற வேதிய குணங்கள் பற்றிய விவரங்களும், தலை, மணி, சாம்பல், போன்ற பேரூட்ட சத்துக்களின் விவரங்களும், கந்தகம், இரும்பு, மாங்கனீசு போன்ற நுண்ணூட்ட சத்துக்களின் விவரங்களும் ஆய்வு செய்து அதற்கு ஏற்றவாறு பயிருக்கு எவ்வளவு உரம் இடவேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துக்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் மத்திய அரசின் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திற்கும் பல நூறு மண் மாதிரிகள் சேகரித்து உரிய மண்வள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

மண் மாதிரி

இந்த திட்டத்தின் கீழ் வரும் கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது கிராமத்திற்குரிய உதவி வேளாண்மை அலுவலக தொடர்பு கொண்டு தேவையான விவரங்களான செல்போன் எண், ஆதார் எண், உள எண் மற்றும் தங்களுடைய விவரம் அனைத்தும் அளித்து மண் மாதிரிகளை கொடுத்து மண்வள அட்டையை பெறலாம்.

மேலும் தமிழ் மண்வளம் இணையதளம் மூலமாக தற்போதைய மண்சத்து விவரத்தினை உடனடியாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com