

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில், மீனவர்களுக்கான மானியத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக கொடுக்கப்போகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் இன்னும் கொடுக்கப்படவில்லை. ஆட்சிக்கு வந்து 83 நாட்கள் ஆகிறது. இன்னும் ஒரு பட்ஜெட் கூட அவர்களால் போட முடியவில்லை. மழைக்காலத்தில் மீன்பிடிப்புக்கு தடை ஏற்படும்போது வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் மானியம் என்பதை ரூ.6 ஆயிரமாக வழங்குவோம் என்று சொன்னார்கள்.
மழைக்காலம் வந்து விட்டது. உயர்த்தி கொடுப்பதாக சொன்ன ஆயிரம் ரூபாய் எங்கே போனது என்று தெரியவில்லை. அதைப்போல விசை படகுகளுக்கு மானியமாக வழங்கப்படும் டீசல் 1,800 லிட்டர் என்பதை 2 ஆயிரம் லிட்டராகவும், சிறிய படகுகளுக்கு 300 லிட்டர் என்பதை 400 லிட்டராகவும் வழங்குவதாகவும் கூறினார்கள். அதையும் இன்னும் வழங்கவில்லை. மீனவர்கள் தைரியமாக ஆழ்கடலுக்கு போய் மீன்பிடிக்க காரணம் பிரதமர்தான். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த உடன் படகுக்கு ரூ.60 லட்சம் மானியமாக கிடைக்கிறது. 50 சதவீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. அதனால்தான்
சாதாரண மனிதர்கள் ஆழ்கடலுக்கு போய் மீன் பிடிக்க முடிகிறது. மோடி வந்த பிறகுதான் இந்த மானியம் கிடைக்கிறது. இதை மறைத்து பொய் பேசுகிறார்கள். இதை எல்லாம் தாண்டி மத்திய அரசின் மானியம் நேரடியாக தமிழகத்தில் மீனவர்களுக்கு ரூ.1,500 கோடி வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.