‘தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்’ - செல்வப்பெருந்தகை

கல்வி என்பது அரசியலோ அல்லது வணிகமோ அல்ல என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
‘தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்’ - செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

இன்று சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வெளியிட்ட கருத்துகள், தமிழக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும் வரலாற்றில் இல்லாத அநீதி ஆகும். தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படுவதற்கு 2020 தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆணவத்துடன் கூறியதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

கல்வி என்பது அரசியலோ அல்லது வணிகமோ அல்ல; அது மக்கள் அடிப்படை உரிமை. மத்திய அரசு, கல்வியை அரசியல் கருவியாக மாற்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தி, அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் தவிர்க்க முடியாத பாதிப்புகளுக்கு உட்படுத்துகிறது. இது அநீதியும், அதிகார வன்முறையும் கலந்த, வரலாற்றில் மிகவும் கொடிய செயல். எந்தவொரு நிபத்தனையையும் விதிக்காமல் உடனடியாக தமிழ்நாட்டின் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com