காலிப்பணியிடங்களை நிரப்ப மின் ஊழியர் மத்திய அமைப்பினர் கோரிக்கை

காலிப்பணியிடங்களை நிரப்ப மின் ஊழியர் மத்திய அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலிப்பணியிடங்களை நிரப்ப மின் ஊழியர் மத்திய அமைப்பினர் கோரிக்கை
Published on

ஊதிய உயர்வு நிலுவை தொகைகளை உடனடியாக வழங்கிட வேண்டும். பல மாதங்களாக வழங்காமல் உள்ள இரட்டிப்பு ஊதியம, பயணப்பட்டியல், பொது வருங்கால வைப்புநிதி முன்பண கடன் ஆகியவைகளை உடனடியாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

பணி ஆட்களுக்கான இ-டெண்டர் முறையை ரத்து செய்திட வேண்டும். 1.12.2019-க்கு பிறகு 16.5.2023-க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு பலனை வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் -கோவை சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு குளித்தலை கோட்ட செயலாளர் நெடுமாறன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் தனபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com