அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் மத்திய நீர் வளத்துறையினர் ஆய்வு

அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் மத்திய நீர் வளத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் மத்திய நீர் வளத்துறையினர் ஆய்வு
Published on

காஞ்சீபுரம்,

அத்திவரதர் தரிசன விழா 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் 48 நாட்கள் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசன விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி அத்திவரதர் தரிசன விழா முடிந்த பிறகு மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அதன்பிறகு அந்த குளத்தில் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

குளம் அசுத்தம் அடையாமல் இருக்க குளத்தில் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் 3 மாதங்களுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்து நீர்ன் தன்மையை அறிந்து மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். என மத்திய நீர்வள ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதையொட்டி மத்திய நீர்வளத்துறை உதவி நீர் வள ஆராய்ச்சி அதிகாரி ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் அத்திவரதர் வைத்திருக்கும் அனந்தசரஸ் குளத்தில் நீரின் தன்மையை ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com