

அப்போது அவர் கூறியதாவது:-
2014-2015-ம் நிதி ஆண்டு முதல் 2018-19-ம் நிதி ஆண்டு வரை சராசரியாக 10.2 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் இந்தியாவில் மீன்வளத்துறை வியக்கத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் மீன் உற்பத்தி வரலாறு காணாத அளவில் 1 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது. சர்வதேச அளவில் இந்திய மீன் உற்பத்தி சுமார் 8 சதவீதமாக உள்ளது. மீன் வளர்ப்பில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது.
கொரோனா, பல துறைகளை போன்று கடல் உணவு துறையையும் பாதித்துள்ளது. இருந்தபோதிலும் கடல் பொருட்கள் ஏற்றுமதி மீண்டு வருகிறது. இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும். கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதியை உயர்த்த தேவையான கொள்கை ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.