குகை பெரிய மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

கிருஷ்ணகிரி பழையபேட்டை குகை பெரிய மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா நடந்தது.
குகை பெரிய மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா
Published on

கிருஷ்ணகிரி பழையபேட்டை குப்பம் சாலையில் அக்காளபுரத்தில் உள்ள ஓம் ஸ்ரீ குகை பெரிய மாரியம்மன் கோவில் 12-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, கலச பூஜை, நவகிரக பூஜை, அம்பாள் கலச பூஜைகள், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து 108 திரவிய ஹோமம் நடந்தது. பின்னர் கலச புறப்பாடும், அம்பாள் கலச அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. மாலை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் சய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com