சென்னையில் பதக்கங்கள் வழங்கும் விழா; காவல் துறை அணிவகுப்பு மரியாதையை முதல் அமைச்சர் ஏற்றார்

சென்னையில் காவல் துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை தமிழக முதல் அமைச்சர் ஏற்றார்.
சென்னையில் பதக்கங்கள் வழங்கும் விழா; காவல் துறை அணிவகுப்பு மரியாதையை முதல் அமைச்சர் ஏற்றார்
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவல் துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் காவலர்களுக்கு குடியரசு தலைவர், முதல் அமைச்சர் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

இதனை முன்னிட்டு நடந்த காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஏற்று கொண்டார். இதன்பின்னர் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா உருவ படத்திற்கு முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து பிற அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழா நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com