

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி கடைவீதி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40). இவர்கள் அதியமான்கோட்டை அருகேயுள்ள புறவடை ஜங்ஷன் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மளிகை கடை நேற்று தொடங்கினர். மளிகை கடைக்கு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் ஜெயலட்சுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது ஜெயலட்சுமி கடைக்குள் சென்ற போது அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை அந்த நபர் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அவர் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.