2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு

ஓசூரில் 2 பெண்களிடம் தங்க சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு
Published on

ஓசூர்:

ஓசூரில் 2 பெண்களிடம் தங்க சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பூ வியாபாரி

ஓசூர் பிரகாஷ் நகர் முதல் கிராசை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 45). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி இரவு ஓசூர் மோரனப்பள்ளி அருகில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் மோட்டார்சைக்கிளில் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.

சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் திடீரென்று அந்த நபர்கள், சாவித்திரி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாவித்திரி கூச்சலிட்டார். ஆனால் அந்த நபர்கள் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றனர். இதுகுறித்து சாவித்திரி ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

ஓசூர் சித்தனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரண்யா (34). இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து சரண்யா கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா கூச்சலிட்டார். ஆனால் அந்த நபர் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.

இதுகுறித்து சரண்யா ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓசூரில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் மோட்டார்சைக்கிளில் வந்த நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com