ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி

ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி நடந்தது.
ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி
Published on

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கண்டிரமாணிக்கம் தெற்கு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் கிஷோர். இவருடைய மனைவி வள்ளி (வயது38). இவர் நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று பள்ளியில் இருந்து தனது குழந்தைகள் 2 பேருடன் மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.குடவாசல் அருகே மணவெளி பகுதியில் வந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், வள்ளியின் மொபட்டை வழிமறித்தார்.பின்னர் அந்த நபர், வள்ளி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது வள்ளி, தனது தங்க சங்கிலியை காப்பாற்ற கடுமையாக போராடி உள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அவரையும், குழந்தைகளையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வள்ளி கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com