தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவக்காற்றால் மழை பெய்து வரும் நிலையில் மேலும் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com