தமிழகத்துக்கு 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்துக்கு 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

வங்கக்கடலில் கடந்த 16-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை(சனிக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவக்கூடும்.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து, நாளை மறுதினம்(ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த நாள்(21-ந்தேதி) புயலாகவும் வலுப்பெறும் என்றும், வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, அதன்பின்னர், வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் 22-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நிலைபெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை நாளை முதல் 21-ந்தேதி(திங்கட்கிழமை) வரையிலான 3 நாட்களுக்கு பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com