

சென்னை,
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை முதல் வருகிற 23-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
அதேபோல் மற்றும் நாளை நீலகிரி, கோவை, சேலம் ,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.