அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சூறைக்காற்று வீசுவதால் இன்று முதல் 4-ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com