தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டலத்தின் மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா நா.புவியரசன் நேற்று கூறியதாவது:-

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் (பிப்ரவரி 21, 22) ஆகிய இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப்ரவரி 23, 24-ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையா நிலவும்.

சென்னையைப் பொருத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com