தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் காலம் கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிறகு, மேலும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையில் கடந்த 6-ந்தேதியில் இருந்து தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com