தமிழகத்தில் ஆகஸ்டு 3 வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் ஆகஸ்டு 3ந்தேதி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்டு 3 வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வரும் ஆகஸ்டு 3ந்தேதி வரை கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஆகஸ்டு 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இதர பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com