வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் திருச்சி, மதுரை, விழுப்புரம், புதுவை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருநெல்வேலி, புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து வரும் 14 ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com