தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வேலூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com