தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 8.30 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com