தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு...!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு...!
Published on

சென்னை,  

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தென்தமிழ பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com