பரங்கிமலை தர்காவில் சந்தன குடம் சுமந்த ஏ.ஆர்.ரகுமான்

பரங்கிமலை தர்காவில் நடந்த சந்தனக்கூடு திருவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு சந்தன குடம் சுமந்தார்.
பரங்கிமலை தர்காவில் சந்தன குடம் சுமந்த ஏ.ஆர்.ரகுமான்
Published on

சென்னையை அடுத்த பரங்கிமலையில் உள்ள 658 வருட பழமையான ஹசரத் சையத் ஷா அலி மஸ்தான் தர்காவின் 139-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நேற்று நடந்தது. சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்றது.

இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதிகாலை 4 மணியளவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது மகன் அமீனுடன் தலையில் சந்தன குடத்தை சுமந்து வந்தார். பின்னர் தர்காவில் சந்தனம் சார்த்தும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com