தேவதுர்க்கை அம்மன் கோவிலில் சண்டி யாகம்

கீழ்வேளூர் அருகே தேவதுர்க்கை அம்மன் கோவிலில் சண்டி யாகம்
தேவதுர்க்கை அம்மன் கோவிலில் சண்டி யாகம்
Published on

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே உள்ள தேவூரில் தேவதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த 13-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தேவதுர்க்கை அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று மகா சண்டியாகம் நடைபெற்றது. இதில் கோ பூஜை, சுகாசினி பூஜை, வடுக பூஜை, சப்த கன்னிகா பூஜை, யாத்ரா தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து தேவதுர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com