ஆடி அமாவாசையையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சண்டி யாகம்

ஆடி அமாவாசையையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சண்டி யாகம் நடைபெற்றது.
ஆடி அமாவாசையையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சண்டி யாகம்
Published on

அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத அமாவாசையையொட்டி பிரத்யங்கிரா தேவிக்கு சண்டியாகம் நடைபெற்றது. இதையொட்டி யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் போடப்பட்டது. மேலும், ஜாதிக்காய், கடுக்காய், கருமிளகு, ரோஜா இதழ், முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் கரும்பு, தேங்காய், சப்போட்டா, மாதுளை பழங்களையும், சேலைகளையும் யாகத்தில் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த யாகத்தில் பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பாண்டிச்சேரி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. அதன்பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com