நெல்லை மண்டல புதிய தலைமை மின் பொறியாளராக சந்திரசேகரன் பொறுப்பேற்பு

மதுரை பாதுகாப்பு மற்றும் தொலை தொடர்பு மேற்பார்வை பொறியாளராக பணிபுரிந்து வந்த சந்திரசேகரன், தமிழ்நாடு மின் பகிர்மான கழக திருநெல்வேலி மண்டல புதிய தலைமை பொறியாளராக பொறுப்பேற்றார்.
நெல்லை மண்டல புதிய தலைமை மின் பொறியாளராக சந்திரசேகரன் பொறுப்பேற்பு
Published on

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளராக, மதுரை பாதுகாப்பு மற்றும் தொலை தொடர்பு மேற்பார்வை பொறியாளராக பணிபுரிந்து வந்த சந்திரசேகரன், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி மற்றும் திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவரை நேரில் சந்தித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com