சந்திராயன்-3 லேண்டர் படங்களை வைத்து நிலவின் கனிமங்கள் குறித்து விரைவில் ஆராய்ச்சி-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தகவல்

சந்திராயன்-3 லேண்டர் படங்களை வைத்து நிலவின் கனிமங்கள் குறித்து விரைவில் ஆராய்ச்சி செய்ய உள்ளதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
சந்திராயன்-3 லேண்டர் படங்களை வைத்து நிலவின் கனிமங்கள் குறித்து விரைவில் ஆராய்ச்சி-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தகவல்
Published on

அறிவியல் கருத்தரங்கு

சேலம் அரசு கலைக்கல்லூரி புவி அமைப்பியல் துறை மற்றும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான சூரிய குடும்பம் மற்றும் நிலவு தொடர்பான 2 நாள் அறிவியல் கருத்தரங்கு அரசு கலைக்கல்லூரியில் நேற்று தொடங்கியது.

கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி தலைமை தாங்கினார். இதில், ஐதராபாத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து காண்டு அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் செயல்பாடுகள் மற்றும் கோள்களில் உள்ள தட்ப வெட்பநிலை குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். இதில், புவி அமைப்பியல் உள்தர ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், புவி அமைப்பியல் துறை தலைவர் ஜெயபாலன் உள்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

கனிமங்கள் குறித்து ஆராய்ச்சி

இதனை தொடர்ந்து தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் நிருபர்களிடம் கூறுகையில், அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் கருத்தரங்கில் சூரிய குடும்பத்தை பற்றியும், கிரகத்தை பற்றியும் உலக அளவில் நடக்கும் ஆராய்ச்சி பற்றியும் விளக்கப்படுகிறது. அதபோல், இந்தியாவில் எவ்வாறு ஆராய்ச்சி நடைபெற்றது என்பது குறித்து மாணவர்களிடம் பேச இருக்கிறோம். ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் நிலவில் சுற்றிச்சுற்றி படம் எடுத்து வருகிறது. அதனுடைய டேட்டாவை வைத்து ஆராய்ச்சி நடத்தி வருகிறோம். தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திராயன் 3 லேண்டர், படம் எடுத்து வருகிறது. அந்த டேட்டாவை வைத்து நிலவில் இருக்கும் கனிமங்கள் குறித்து விரைவில் ஆராய்ச்சி செய்ய இருக்கிறோம், என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com