சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
Published on

சென்னை,

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பல்லாவரம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே 25-ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை மறுநாள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.20, 11.40, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் புறநகர் ரெயில்கள் முழுவதும் ரத்துசெய்யப்படுகின்றன. அதேபோல, கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை இடையே (24-ஆம் தேதி) இரவு 9:40 மற்றும் 10:15 மற்றும் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com