

சென்னை,
சென்னை சென்ட்ரல்- கூடூர் பிரிவில் கும்மிடிப்பூண்டி யார்டில் நேற்று முதல் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் இன்றும், நாளையும் நடக்கிறது. இதையொட்டி கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரவு 9.45 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது. இரவு 11.20 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இரவு 10.35 மணிக்கு புறப்படும். மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்மிப்பூண்டி- மூர் மார்க்கெட் இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடைய ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை 3.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்பட்டு மூர் மார்க்கெட்டுக்கு வரும் மின்சார ரெயில் கும்மிப்பூண்டி- மீஞ்சூர் இடையே இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை 4.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.