

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல்-ஜோலார்பேட்டை இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்-16089) நாளை மறுநாள் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16090) எல்.எச்.பி. பெட்டியாக மாற்றப்பட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.