சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்..!

பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 31, செப்டம்பர் 3, 5, 10, 12-ம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்..!
Published on

சென்னை,

சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பெடபரியா–நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 237-வது பாலத்தில், தற்போதுள்ள இரும்பு பாலத்தை அகற்றி கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, சில ரெயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 மணி நேரம் தாமதம்

சென்னை சென்ட்ரல் – மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே இயக்கப்படும் 12840-வது எண் எக்ஸ்பிரஸ் ரெயில், ஆகஸ்ட் 31, செப்டம்பர் 3 மற்றும் 10-ம் தேதிகளில் மாலை 7 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இதனால் ரெயில் புறப்படும் நேரம் 1 மணி நேரம் தாமதமாகும்.

2 மணி நேரம் தாமதம்

இதேபோல், செப்டம்பர் 5 மற்றும் 12-ம் தேதிகளில் புறப்பட வேண்டிய 12840-வது எண் சென்னை சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், மாலை 7 மணிக்கு பதிலாக இரவு 9 மணிக்கு புறப்படும். அன்று ரெயில் சேவை 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.

பயணிகள் கவனிக்க வேண்டுகோள்

பாலம் மாற்றும் பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், மேற்கண்ட தேதிகளில் பயணம் செய்யும் பயணிகள் மாற்றப்பட்ட ரெயில் புறப்படும் நேரத்தை கவனத்தில் கொண்டு பயணத்தை திட்டமிடுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com