எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் சுற்றுப்பயணத்தில் மாற்றம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொடர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் சுற்றுப்பயணத்தில் மாற்றம்
Published on

சென்னை,

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7-ந்தேதி முதல் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொடர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி வருகிற 26-ந்தேதி வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தில் 17, 18-ந்தேதி களில் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதன்படி, வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும், 29-ந்தேதி (திங்கட்கிழமை) பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com