பராமரிப்பு பணி- மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி- மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு, ஆவடி செல்லும் மின்சார ரெயில் வில்லிவாக்கத்தில் இருந்து விரைவு பாதை வழியாக இயக்கப்படும்.

மேலும் இந்த ரெயில் இன்று(புதன்கிழமை) முதல் வரும் 23-ந் தேதிவரை (17-ந் தேதி தவிர) கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர் ரெயில் நிலையங்களில் நிற்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com