

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், மதியம் 12.50 முதல் மாலை 6.50 வரை பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் மெமு ரெயில், சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில், சூலூர்பேட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை மூர்மார்க்கெட் வரும் பயணிகள் ரெயில் ஆகியவை முழு நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 2.30, 3.30 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் எளாவூர் -சூலூர்பேட்டை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில், சூலூர்பேட்டையில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ஆகியவை சூலூர்பேட்டை - எளாவூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.