

சேலம்,
சேலம்-ஜோலார்பேட்டை வழி மார்க்கத்தில் சாமல்பட்டி- திருப்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள காகங்கரை ரெயில்வே யார்டு பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோடு-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரெயில் (56108) ஈரோட்டில் இருந்து காலை 6 ' மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மொரப்பூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மொரப்பூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரெயில் இயக்கப்படாது. இதேபோல் ஜோலார்பேட்டை- ஈரோடு பாசஞ்சர் ரெயில் (56107) இன்று ஜோலார்பேட்டையில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மொரப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.47 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும்.
இதனால் ஜோலார்பேட்டை-மொரப்பூர் இடையே ரெயில் இயக்கப்படாது என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.