

ஈரோடு,
திருச்சி ரெயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக ஈரோடு திருச்சி (வண்டி எண்-56106) பாசஞ்சர் ரெயில் சேவையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 16,23, 30-ந்தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி ஈரோடு சந்திப்பில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
இதேபோல் திருச்சி சந்திப்பில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட வேண் டிய திருச்சி -பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16843) நாளை மற்றும் வருகிற 16, 23, 30-ந்தேதிகளில் 25 நிமிடங்கள் தாமதமாக அதாவது மதியம் 1.25 மணிக்கு திருச்சி சந்திப்பில் இருந்து புறப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.