சென்னை-மேற்குவங்கம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஜார்கண்ட் மாநிலம் பாகூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-மேற்குவங்கம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை,

சென்னை சென்டிரல்-மேற்குவங்கம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“சென்னை சென்டிரலில் இருந்து மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பாய்குரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22611) பாகூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். அதே போல, நியூ ஜல்பாய்குரியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22612) இன்று (சனிக்கிழமை) முதல் பாகூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com