குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பகல் நேர ரெயிலாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
Published on

சென்னை,

தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பகல் நேர ரெயிலாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளது. இந்த ரெயில் சேவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி வரை (வருகிற 16, 23, 30 தவிர) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரெயில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ரெயில் நிலையத்தில் நிற்காது. அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com