குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

தண்டவாள சீரமைப்பு பணிக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
Published on

திருச்சி,

நெல்லை ரெயில் நிலையத்தில் நடந்து வரும் தண்டவாள சீரமைப்பு பணிக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) வருகிற 20-ந் தேதி, 21,22,24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம், நாகர்கோவில், நெல்லை, மதுரை வழியாக செல்வதற்கு பதிலாக பாலக்காடு, பொள்ளாச்சி, திண் டுக்கல் வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும்.

இந்த ரெயில் மேற்கண்ட நாட்களில் பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரெயில் வருகிற 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, சொரனூர் வழியாக குருவாயூர் செல்லும்.

அதேபோல, தாம்பரம்-செங்கோட்டை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20683) வருகிற 25 மற்றும் 28-ந் தேதிகளில் நெல்லை செல்லாமல் சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் வழியாக மாற்றுப்பாதையில் செங் கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து தாம்பரம் செல்லும் ரெயில் (வ.எண்.20684) தென்காசியில் இருந்து சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி வழியாக விருதுநகர் செல்லும். திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22627) வருகிற 24-ந்தேதி விருதுநகரில் இருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் ரெயில் நிலையத்துக்கு செல்லும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com