குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
Published on: 

சென்னை,

பராமரிப்புப் பணிகள் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில்-கோவை ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

குருவாயூர் எக்ஸ்பிரஸ்

நாளை (வியாழக்கிழமை), வருகிற 22-ந்தேதி, 24-ந்தேதி, 26-ந்தேதி, 29-ந்தேதி மற்றும் வருகிற 1-ந்தேதி, 3-ந்தேதி, 6-ந்தேதி ஆகிய நாட்களில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:16128) விருது நகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், மணப்பாறை வழியாக வராது.

நாகர்கோவில்-கோவை

அதுபோல் 20-ந்தேதி, 23-ந்தேதி மற்றும் வருகிற 4-ந்தேதி, 7-ந்தேதி ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் (எண்:16321) விரு துநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக் குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக கரூர் சென்று கோவைக்கு புறப்படும். அன்று இந்த ரெயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் வழியாக செல்லாது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

X