குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
Published on

சென்னை,

தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட சென்னையில் இருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் குருவாயூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கிடையே, திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும், 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், 29 மற்றும் 30-ந் தேதிகளில் சென்னையில் இருந்து எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com