

ஈரோடு,
திருப்பத்தூர் -சேலம் பகுதியில் அமைந்துள்ள தொட்டம்பட்டி ரெயில்வே யார்டில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜோலார்பேட்டை -ஈரோடு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் 56107) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஜோலார்பேட்டை சந்திப்பில் இருந்து நாளை மதியம் 2.45 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 30 நிமிடங்கள் காலதாமதமாக புறப் படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.