காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்!

பராமரிப்பு பணி காரணமாக காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்!
Published on

சென்னை,

பராமரிப்பு பணிகள் காரணமாக காச்சிகுடா–தூத்துக்குடி இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து தூத்துக்குடி நோக்கி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 17615) வருகிற ஜூன் 15ஆம் தேதி முதல் மாற்றிய நேர அட்டவணைப்படி இயக்கப்படும்.

அதன்படி, திருச்சிக்கு மாலை 4.55 மணிக்கு பதிலாக மதியம் 2 மணிக்கே ரெயில் வந்து சேரும். தொடர்ந்து, மதுரைக்கு மாலை 4.20 மணி, விருதுநகருக்கு மாலை 5.03 மணி, தூத்துக்குடிக்கு இரவு 10.30 மணிக்கு பதிலாக இரவு 7.15 மணிக்கே ரெயில் சென்றடையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com