மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

இன்று முதல் 5 நாட்கள் மாம்பலம் வரை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
Published on

திருச்சி,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக, திருச்சி-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:12653/12654) ரெயில் சேவையில் 5 நாட்கள் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-சென்னை எழும்பூர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:12654), இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை சென்னை எழும்பூருக்கு பதிலாக மாம்பலம் ரெயில் நிலையத்தில் தனது சேவையை நிறைவு செய்யும்.

அதேபோல், சென்னை எழும்பூர்- திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:12653) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி வரை சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இரவு 12.05 மணிக்கு புறப்படும் என்று திருச்சி கோட்ட தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்க ளது பயணத்தை திட்டமிடுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com